திருவண்ணாமலை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வந்தவாசி சார்பில் தெற்கு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, மகளிர் காவல் நிலையம் மற்றும் வடக்கு காவல் நிலையம் ஆய்வாளர் அல்லிராணி உள்ளிட்டோர்களை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் வந்தவாசி வட்டார ஒருங்கிணைப்பாளர் பி.மகாலட்சுமி, சிறப்பாசிரியர் வி.புருஷோத்தமன் மற்றும் சமுக வழி நடத்துனர்கள் மற்றும் சமுக மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேப்டன் பிரபாகரன், மலர் சாதிக் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.