தாம்பரம்: தாம்பரத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை விழா, ஆஷிக் ஹமீது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாம்பரம் மத்திய பகுதி கழகத் தலைவர் ஜோஸ்வா சுந்தர் வரவேற்புரை வழங்கினார்.
இந்த இணைப்பு விழாவிற்கு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார், பி.பி.ஏ., தலைமை தாங்கி, புதிதாக இணைந்த உறுப்பினர்களை வரவேற்றார். இவ்விழாவில் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.
விழாவில் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட இணைச் செயலாளர் விஜய் தியாகு, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் பிரவீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் ஜாபர், சீனி, மாலிக், ஷரீஃப், ஜுபைர், ரீஜி, இனாமுல், ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை அப்துல் ரகுமான் தொகுத்து வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட அணி அமைப்பாளர் டாக்டர் சரவணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுபாஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரவீன் குமார், பெருங்களத்தூர் பகுதி கழகச் செயலாளர் செந்தில்குமார், தாம்பரம் கிழக்கு பகுதி கழகச் செயலாளர் தினேஷ், தாம்பரம் வடக்கு பகுதி நிர்வாகி மணிகண்டன், தாம்பரம் தெற்கு பகுதி நிர்வாகி குமரன், செங்கல்பட்டு வடமேற்கு மகளிர் அணி நிர்வாகி இந்துமதி, தாம்பரம் மத்திய பகுதி மகளிர் அணி நிர்வாகி பிரவீனா, 49-வது வட்ட கழகச் செயலாளர் சதீஷ்குமார், 50-வது வார்டு வட்ட கழகச் செயலாளர் புருஷோத்தமன், 50-வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றியம், பகுதி, ஊராட்சி, வட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் அப்துல் முனாப் நன்றியுரை வழங்கினார்.
இந்த உறுப்பினர் சேர்க்கை விழா, தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் அமைப்பு வலுவடைந்து வருவதை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.