தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திாியும் தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை மாநகராட்சி பாதுகாக்குமா?
தூத்துக்குடி தமிழக அரசு சாா்பில் தமிழகத்தில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு என்று சில சட்டங்கள் உண்டு அதன்படி சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி பகுதிகள் உள்பட பல இடங்களில் அதிகாாிகளிடம் அனுமதி பெற்றுதான் வளா்க்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதை பின்பற்றும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திாிந்து பல்வேறு விபத்துக்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கால்நடைகளை அதிகாாிகள் கண்டு பிடித்து கோசோலையில் அடைக்க செய்து சில சமயங்களில் அபதாரங்கள் விதிக்கப்பட்டு கடுமையான கண்டிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது
அதே வேலையில் மாநகராட்சி பகுதி முழுவதும் எல்லா பகுதிகளிலும் தெருநாய்கள் சொாிப்பிடித்தும் வெறிப்பிடித்தும் நாய்கள்உலா வருகின்றன இந்த நாய்களால் அதிகாலை பொழுது மாா்க்கெட்க்கு செல்லும் வியாபாாிகள் பால் மற்றும் நாளிதழ்கள் கொண்டு செல்பவா்களை பலரையும் விரைட்டி கடிக்கின்றனா்.
பலா் பாதிக்கப்பட்டுள்ள நிலையை நாம் கண்டறிந்துள்ளோம். அதற்கான தீர்வுகள் முழுமையாக கிைடக்க பெறாத நிலை தொடர்கிறது. பல சமயங்களில் சாலையை கடக்கின்ற போது ஏற்படும் விபத்துக்களாலம் உயிாிழப்பும் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் மாநகராட்சிக்குாிய எல்லா வாிகளையும் முறையாக பெற்றுக்கொள்கின்ற சில சமயங்களில் தவறும் பட்சத்தில் கடப்பாறை மன்வெட்டியுடன் வந்து தண்ணீர் இணைப்பை துண்டிப்பதற்கு குழி தோண்டி விடுகிறாா்கள். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று அரசியல் கட்சி மேடையிலும் அதிகாாிகளின் கூட்டத்திலும் பேசும் மக்கள் பிரதிநிதிகள் வெறிப்பிடித்த நாய்களையும் நோய்களை உருவாக்கும் சொறி சிரங்குகளுடன் உலா வரும் தெருநாய்களை கண்டு கொள்ளாமல் மக்களை பற்றி சிந்திக்காமலும் உலா வருகின்றனா். பள்ளி கல்லூாி செல்லும் மாணவ மாணவிகள் உள்பட எல்லா தரப்பினரும் பாதிக்கப்படும் வகையில் உலா வரும் நாய்களை மாநகராட்சி நிா்வாகம் முழுமையாக கண்டறிந்து அதற்கான தீா்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சண்முகபுரம் பகுதியில் அதிகாலைபொழுதில் அதிக அளவில் உலா வரும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்களின் கோாிக்கையாக உள்ளது. இதை மாநகராட்சி நிறைவேற்றுமா? வேடிக்கை பாா்க்குமா? என்று பொறுத்திருந்து பாா்ப்போம்.