தேனி அருகே துப்புரவு பணிகளை அதிகாலையில் ஆய்வு செய்யும் செயல் அலுவலர்
தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சியின் செயல் அலுவலராக சா. இளங்கோவன் பணியாற்றி வருகிறார் இவர் அதிகாலை 5 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பேரூரில் உள்ள 15 வார்டுகளில் குப்பைகள் பெருமளவு சேரும் இடங்கள் பொது இடங்கள் அரசு ஆரம்ப சுகாதார விடுதி மற்றும் மரபுக் கழிவுகள் சேகரம் செய்யப்படும் இடங்கள் என 25 க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மை பணி மேற்கொள் ளப் பட்டு வருவதை ஆய்வு செய்தும் ஒவ்வொரு தெருவாக சென்று வீட்டில் சேகரமாகும் குப்பைகளை பேரூராட்சியின் முக்கிய அங்கமான பணியாளர்களான தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து வழங்க வேண்டும் அறிவுறுத்தினார்
இந்த ஆய்வின் மூலம் லேசான நெகிழி கழிவுகள் கடின நெகிழி கழிவுகள் காகித கழிவுகள் உடைந்த கண்ணாடி கழிவுகள் உடையாத கண்ணாடி கழிவுகள் இரும்பு கழிவுகள் அட்டை கழிவுகள் மின் கழிவுகள் மரம் மற்றும் சாமான் கழிவுகள் என்று தரம் பிரித்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு ஏற்ற பொருட்கள் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டு மக்கும் கழிவுகள் உரமாக மாற்றும் பதப்படுத்தப்பட்டு இயற்கை உரமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன
இந்த பணிகள் குறித்து செயல் அலுவலர் கூறும் போது பேரூராட்சி பகுதிகளில் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் பொது மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதால் வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் சுற்றுப் புறத்தை தூய்மையாக பரமாரித்தல் போன்ற பணிகள் செய்து பேரூராட்சிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் சா.இளங்கோவன் கேட்டுக்கொண்டார்.