செங்கோட்டையில் மியாவாகி குறுங்காடு அமைக்கும் திட்ட துவக்க விழா.
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி ஜூலை 7
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் ரோட்டில் உள்ள கசடு கழிவு மேலாண்மை மைய வளாகத்தில் வைத்து செங்கோட்டை நகராட்சி மற்றும் மழை நண்பர்கள் குழு சார்பில் மியாவாகி அடர்வன காடுகள் அமைக்கும் திட்ட துவக்க விழா நடந்தது. விழாவிற்கு நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரபாண்டியன் தலைமைதாங்கினார். மழை நண்பர்கள் குழு நிறுவனத்தலைவா் சுந்தரமகேஷ் தலைவா் கிருஷண்வேணி, செயலாளா் சித்தமருத்துவா் டாக்டா் கலா, பொருளாளா் அன்சாரி, முன்னாள் தலைவா் சிவக்குமார் வர்த்தக சங்க பொருளாளா் லெட்சுமணன்(எ)சதீஷ் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.
சுகாதார மேற்பார்வையாளா் முத்துமாணிக்கம் அனைவரையும் வரவேவேற்று பேசினார். அதனைதொடா்ந்து வளாகத்தில் பூவரசு, வேம்பு, கொய்யா, நாட்டு சீத்தா, நாட்டு பாதாம், காட்டு நெல்லி, நாட்டுப் புங்கை, புளியங்கன்று உள்பட சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளா்கள் காளியப்பன், முனிராஜ், துாய்மை இந்தியா திட்ட பணியாளா் குமார், நோய் தடுப்பு பணியாளா்கள் நகராட்சி துாய்மை பணியாளா்கள், குற்றாலம் ரோட்டரி சாதனா தலைவா் ஜெயலெட்சுமி, பட்டையாத்தலைவா் கிருஷ்ணவேணி, முன்னாள் தலைவா் ஜீவா, துணைச்செயலாளா் பொன்னி, உதவி ஆளுநர் அனிதாஆனந்த் களப்பணி உதவியாளா்கள், துாய்மை பணி மேற்பார்வையாளா்கள், டிபிசி பணியாளா்கள், பரப்புரையாளா்கள், பரப்புரை மேற்பார்வையாளா்கள், துாய்மை பணியாளா்கள் மற்றும் எஸ்எம்எஸ்எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆசிரிய பெருமக்கள் சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.