கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) இணைந்து “சுவச்சதா பக்வாடா” தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தின.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுலாத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, தூய்மை என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்கள் முன்னோடிகளாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டதுடன், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *