தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சருத்துப்பட்டி ஊராட்சியில் அதிகாலை துப்புரவுப் பணிகளை ஊராட்சி செயலாளர் எம். செல்லபாண்டி நேரில் ஆய்வு செய்தார். 9 வார்டுகளில் குப்பை சேகரிப்பு, தரம் பிரித்தல் மற்றும் தூய்மை பணிகளை பார்வையிட்ட அவர், பொதுமக்கள் வீடுகளிலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், சேகரிக்கப்படும் கழிவுகள் மறுசுழற்சி மற்றும் இயற்கை உரம் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படுவதாகவும், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்தார்.