புவனகிரி ஜூலை, 7
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே, ஆதிக் குடிகள் ஐக்கிய பேரவை சார்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 167-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவிற்கு அமைப்பின் நிறுவனத் தலைவர் இரா. ரகு வசந்தன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் அக்ரி ஐயப்பன், மாநில பொருளாளர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் இள. சதீஷ், புவனகிரி ஒன்றியத் தலைவர் சோமு விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவையின் மாநில பொதுச் செயலாளர் புவனை கோ. வெற்றிவேல், சாம்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் தொகுதி அமைப்பாளர் வ.க. செல்லப்பன், மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மண்டல செயலாளர் ஸ்ரீதர், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தவெகவைச் சேர்ந்த ஜானகிராமன், சபேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சமூகப் பணிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகளையும் நினைவுகூர்ந்து பேசினர்.
நிகழ்ச்சியில் ஆதிக் குடிகள் ஐக்கிய பேரவையின் நகரத் தலைவர் முனைவர் சிவசக்தி, நகர செயலாளர் வசந்தராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சரவணன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.