தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம், ஜூலை 9:

திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், 101–தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ருத்ராவதி பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாதன் தலைமை வகித்தார். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மு.பெ. சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

மேலும், மகளிர் அணி மாநில துணை அமைப்பாளர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், ருத்ராவதி பேரூர் கழகச் செயலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள், பூத் வாரியான அமைப்பு வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கை, அரசின் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு பூத் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஏராளமான கழக நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *