மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் தமிழக முழுவதும் நடத்தி வரும் விழிப்புணர்வு பேரணியின் ஒரு பகுதியாக கரூரில் பங்கேற்றார். கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாமக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை கட்டும் பணிக்காக கர்நாடக அரசு ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும், இதனால் தமிழகத்தின் நீர்வளம், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காவிரி நீர் தொடர்பான தீர்ப்புகள் தமிழகத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேகதாது அணை அமைந்தால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் எனவும், தமிழக அரசு அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.