கரூர் செய்தியாளர் மரியான் பாபு
.ஆணவப் படுகொலைக்கு தனி சிறப்புச் சட்டம் இயற்ற கோரி தோழர் களம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புபள் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேற்கு மாவட்ட செயலாளர் டைகர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார்.
கரூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில நிர்வாகி ஆணவப் படுகொலை கண்டித்தும் அதற்காக இயற்றப்பட வேண்டிய சட்டத்தின் அவசியம் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து தோழர் களம் நிறுவனத்தலைவர் தி. க. சண்முகம் ஆணவ படுகொலையை தடுப்பதற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பினார். ஜாதி ஆணவ படுகொலை, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை வெறும் சட்டங்களால் மட்டும் தண்டித்து விட முடியாது.தற்போதைய முதல் அமைச்சர் கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களின்போது, நான் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
அதை நாங்கள் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்பவில்லை ஆனால், சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் செய்ய வேண்டும். ஆணவ படுகொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும். ஆணவ படுகொலைக்காக தனி சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர்.சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியும், தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி வழங்குவதில் முன்னுரிமையும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன்,மாநில பொதுச்செயலார் நெய்வேலி அசோக் இரா. ராஜகோபால் செயற்குழு தலைவர் ராம்ஜி(எ)நெப்போலியன் தலைமை நிலைய செயலாளர் தமிழன் சு. கவின்குமார் இளைஞர் அணி துணை செயலாளர் க. ஞானவேல் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் நாகராஜன் மற்றும் குமாரசாமி தனபால் சண்முகம் பைசல் அஹமத் கந்தசாமி சிலம்பம் அரசப்பன் கேசவன் அபிமன்னன் முகேஷ் என பலர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து ஒரு கொண்டனர்.