ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் அரக்கோணம் MRF நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி (CSR Fund) ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அரக்கோணம் நகராட்சி, வார்டு 3, கணேஷ் நகரில் அமைக்கப்படவுள்ள பூங்கா கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார்.

இப்பூங்காவினது 15,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள், நடை பயிற்சி பாதை, ஜங்கிள் ஜிம் (Jungle gym), மரக்கன்றுகள் நடுதல், சிசிடிவி (CCTV) பொறுத்துதல், கிரானைட் இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில் MRF நிறுவனத்தின் பொது மேலாளர் ஜான் டேனியல், நகராட்சி ஆணையாளர் ஆனந்தன், நகரமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *