கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர், ஜூலை 8:

கரூர் மேற்கு மாவட்டம், கரூர் வடக்கு ஒன்றிய தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.பி. மதியழகன் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அலுவலகம் திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், கரூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *