புதுச்சேரி, ஜூலை 8:

புதுச்சேரி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், கடந்த 1991 முதல் 2024-ஆம் ஆண்டு வரை தேசிய விருது பெற்ற 6 கைவினைக் கலைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜெயராமன், திட்ட மேலாளர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் ஆனந்தன், ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊக்கத்தொகைக்கான காசோலையை பெற்ற தேசிய விருதாளர்கள்: வி.கே. முனுசாமி, காரைக்காலைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சேகர், மாசிலாமணி, வெங்கடேசன் மற்றும் மோகந்தாஸ் ஆகியோர் ஆவர்.

தேசிய அளவில் கைவினைக் கலையில் சிறந்து விளங்கி விருது பெற்ற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *