திண்டுக்கல் அருகில் அனுமந்தராயன் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோய் பயனாளிகளுக்கு சத்துமாவு ஊட்டச்சத்து உணவு வழங்கு விழா நடைபெற்றது. இதற்கு காசநோய் மாவட்ட துணை இயக்குனர் மருத்துவர் சத்தியப்பிரியா தலைமை தாங்கினார்கள்,
ஜெம் லயன்ஸ் சங்கம் தலைவர் Dr.லயன். சரவணன் முன்னிலை வகித்தார், அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் சமூக சேவகர் Amb.Dr. மருதை கலாம் அனைவரையும் வரவேற்றார் , சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் வைஷ்ணவி ,சமூக ஆர்வலர் மைலாப்பூர் வேளாங்கன்னி,ஜெம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கே.பி கணேசன், குமார், ரவிச்சந்திரன், கலந்து கொண்டு மருத்துவர்கள் உடன் காச நோய் பயனாளிகளுக்கு சத்துமாவு ஊட்டச்சத்து உணவான சுண்டல், நவதானியங்கள் வழங்கினார்கள். இவ்விழாவை அறக்கட்டளை நிர்வாகி ஆரோக்கியராஜ், லயன்ஸ் சங்க ராஜேஷ் , மருத்துவர் ஊழியர்கள் ஏற்பாடு செய்தனர். காச நோய் சிகிச்சை மேற்பார்வையாளர் ராஜா நன்றி கூறினார்.