துறையூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
துறையூர் ஜூலை-10
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் 2027 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மேற்பார்வையாளர் பணி தொடர்பாக பயிற்சி நடைபெற்றது.துறையூர் வட்டாட்சியர் சிவகுமார் தலைமை தாங்கி நேற்று (10-07-2027) பயிற்சியை துவக்கி வைத்தார்.இதில் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் துறையூர் நகராட்சி மற்றும் துறையூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி, உப்பிலியபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பு பணிக்கு மேற்பார்வையாளர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு களப்பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.
முதல் கட்டமாக ஜூலை 10 முதல் 15ந்தேதி வரை 100 களப்பணியாளர்களுக்கும், 2ஆம் கட்டமாக ஜூலை 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 369 களப்பணியாளர்களுக்கும் காலை 9-30 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சி நடைபெறும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று எவ்வாறு கணக்கீடு செய்வது, வீட்டு பட்டியல் தயார் செய்து ஆன்லைன் மூலம் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது பற்றி களப்பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.
இதில் வருவாய் ஆய்வாளர் இளவரசி, கிராம நிர்வாக அலுவலர்கள் வசந்த மலர், பொன்மலர், நகரமைப்பு ஆய்வாளர் தவமணி, மண்டல வட்டார துணை அலுவலர்கள் துரைராஜ்,குமார் மற்றும் கிராம உதவியாளர்கள் பயிற்சி முகாமில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்