கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பை நவீன வகுப்பறை திரையில் நேரடியாக மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைலரானது.
இந்த நிகழ்வு தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். மல்லிகா தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலானதை ஆதாரமாக வைத்து, விசாரணை செய்த கரூர் மாவட்ட கல்வி அலுவலர்( தொடக்க கல்வி)A.சண்முகவேல் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.