தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
முறைகேடு புகாரை நிரூபித்தால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: திமுக நிர்வாகிக்கு சவால்.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே கொழுமங்குழி ராசிபாளையத்தில் ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றை மேம்படுத்தி புதிய மின் மோட்டார் பொருத்தும் பணியில் முறைகேடு நடந்ததாக சிலர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பைச் சேர்ந்தவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் மேற்கண்ட பணியில் எந்தவித முறைகேடும் செய்யவில்லை. நான் முறைகேடு செய்ததாக புகார் அளித்த திமுக நிர்வாகியோ அல்லது அவருக்கு ஆதரவாக வரும் தவேக நிர்வாகிகளோ, தங்களது குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபித்தால், அந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் நபருக்கு கிராம மக்கள் முன்னிலையில் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் அறிவித்துள்ள ரூ.1 லட்சம் பரிசை ஆதாரங்களுடன் பெற்று செல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.