நாகப்பட்டினம்,ஜூலை.10-
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஜிசுன் பரக்கத் தலைமை தாங்கினார். பள்ளிதலைமை ஆசிரியர் (பொ) அகல்யா, துணை தலைவர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் கீதா வரவேற்றார்.
கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் ஞானசேகர், வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பேசினார். பள்ளி இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்ப்பது, பள்ளியில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், பள்ளி வளாகத்திற்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாத்திமா பர்வீன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.