அரியலூர்: மாமன்னர் அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜையையொட்டி, அரியலூர் மாவட்ட யாதவர் அமைப்பினர், அமைப்பின் தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலை அருகே சென்றடைந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அங்கு மாவட்ட யாதவ குலஅமைப்பினர் சார்பில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனியமுத்து யாதவ்,சக்திவேல் யாதவ்,உமா கேசன் யாதவ்,சங்கர் யாதவ், மணிகண்டன் யாதவ்,பசுபதி யாதவ்,கோவிந்தராஜ் யாதவ், ரமாவளி யாதவ், மரகதம் யாதவ் ராதா யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *