திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை திரையிடும் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் சேவையை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வ. மோகனச்சந்திரன், அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்தியாவில் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் இத்திட்டம் குறித்த தகவல்கள் சென்றடையும் வகையில் ஒருவிழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன எல்.இ.டி திரை வாகனம்:இக்குறும்படத்தை மக்கள் எளிதில் பார்க்கும் வகையில், நடமாடும் அதிநவீன எல்.இ.டி (LED) மின்னணு திரை கொண்ட வாகனத்தில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்கள், கடைவீதிகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.ஆட்சியர் அறிவுறுத்தல்:வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் திரு. வ. மோகனச்சந்திரன் அவர்கள், அரசின் எதிர்கால நலத்திட்டங்கள் மற்றும் திட்டமிடலுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் மிகவும் அவசியமானவை. எனவே, கணக்கெடுப்புப் பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது பொதுமக்கள் தங்களின் சரியான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பிரிவு அலுவலர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *