இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சை நிறுவனங்களில் ஒன்றான அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், கோவை சரவணம்பட்டியில் தனது புதிய கிளையை திறந்து வைத்து, இந்தியா மற்றும் உலகளவில் 150-க்கும் மேற்பட்ட கிளைகள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

புதிய கிளையின் துவக்கத்தின் மூலம், உலகத் தரத்திலான முடி மற்றும் சரும சிகிச்சைகளை மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் வழங்கும் தனது நோக்கத்தை நிறுவனம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கிளைகள் மூலம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், சரவணம்பட்டி மக்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர்தர சிகிச்சைகளை வழங்க உள்ளது.

இக்கிளையில் Percutaneous FUE Hair Transplant, Stem X 27 Pro™️ (PRP Pro+), LASER Hair Therapy, Regen Pro9™️ உள்ளிட்ட அமெரிக்க US-FDA அங்கீகாரம் பெற்ற நவீன முடி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், பல்வேறு மேம்பட்ட சரும பராமரிப்பு சிகிச்சைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.

மேலும், Glutathione IV Therapy, HydraFacial, Q-Switched Laser, Botox, Dermal Fillers, Thread Lift, Full Body Laser Hair Reduction உள்ளிட்ட நவீன சரும சிகிச்சைகளும் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களால் அதிநவீன உபகரணங்களின் உதவியுடன் வழங்கப்படுகின்றன.

சிகிச்சைகளுக்கு துணையாக, நிறுவனத்தின் பிரத்யேகமான OnePro முடி மற்றும் சருமப் பராமரிப்பு தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிகிச்சையின் பலனை நீண்ட காலம் பராமரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்தயாரிப்புகளுடன், கிளைகளில் பயன்படுத்தப்படும் நவீன மருத்துவ உபகரணங்களும் OnePro தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன.

கிளை திறப்பு விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத் குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கிளையை திறந்து வைத்தார். மேலும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி சந்தோஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் திரு. வி. ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. சரண்வேல் ஜெயராமன் கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகத்தினர், சரவணம்பட்டி கிளையின் துவக்கம் என்பது நிறுவனத்தின் விரிவாக்கம் மட்டுமல்லாமல், அறிவியல் அடிப்படையிலான தரமான முடி மற்றும் சரும சிகிச்சைகளை பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதற்கான மற்றொரு முக்கியமான முன்னேற்றம் என்றும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சரண் வேல், “கோவையில் இது எங்களின் மூன்றாவது கிளையாகும். ஏற்கனவே ஆர்.எஸ்.புரம் மற்றும் அவினாசி சாலையில் இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன. முழு அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவ சேவை, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அனைவரும் அணுகக்கூடிய தரமான சிகிச்சைகளை வழங்குவதே எங்களின் நோக்கமாகும்,” என்றார்.

மேலும் முடி தொடர்பான சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் வாழ்க்கை முறை, உடல்நலம் மற்றும் மருத்துவ பின்னணி ஆகியவற்றை முதலில் விரிவாக ஆய்வு செய்து, அதற்கேற்ற தனிப்பட்ட சிகிச்சைத் திட்டத்தை நிபுணர் மருத்துவர்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் மூலம் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

திறப்பு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்காக இலவச முடி மற்றும் சரும ஆலோசனை முகாம் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சரண் வேல் தெரிவித்தார்.

திறப்பு விழாவில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய கிளினிக் துவக்கத்தை சிறப்பித்தனர்.

தொடர்புக்கு: +91 80989 56789

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *