போடிநாயக்கனூர் அருகே துப்புரவு பணிகளை அதிகாலையில் ஆய்வு

செய்யும் ஊராட்சி செயலர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலாளர் பொட்டு முருகேசன் பணியாற்றி வருகிறார்

இவர் அதிகாலை 5 மணிக்கு ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மக்கத்தம்மாள் ஜெகதீஸ் சந்திரபோஸ் உத்தரவின்படி ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் குப்பைகள் பெருமளவு சேரும் இடங்கள் பொது இடங்கள் அரசு ஆரம்ப சுகாதார விடுதி மற்றும் மரபுக் கழிவுகள் சேகரம் செய்யப்படும் இடங்கள் என 25 க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மை பணி மேற்கொள் ளப் பட்டு வருவதை ஆய்வு செய்தும் ஒவ்வொரு தெருவாக சென்று வீட்டில் சேகரமாகும் குப்பைகளை ஊராட்சியின் முக்கிய அங்கமான பணியாளர்களான தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து வழங்க வேண்டும் அறிவுறுத்தினார்

இந்த ஆய்வின் மூலம் லேசான நெகிழி கழிவுகள் கடின நெகிழி கழிவுகள் காகித கழிவுகள் உடைந்த கண்ணாடி கழிவுகள் உடையாத கண்ணாடி கழிவுகள் இரும்பு கழிவுகள் அட்டை கழிவுகள் மின் கழிவுகள் மரம் மற்றும் சாமான் கழிவுகள் என்று தரம் பிரித்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு ஏற்ற பொருட்கள் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டு மக்கும் கழிவுகள் உரமாக மாற்றும் பதப்படுத்தப்பட்டு இயற்கை உரமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன

இந்த பணிகள் குறித்து ஊராட்சி செயலாளர் கூறும் போது ஊராட்சி பகுதிகளில் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் பொது மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதால் வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் சுற்றுப் புறத்தை தூய்மையாக பரமாரித்தல் போன்ற பணிகள் செய்து ஊராட்சிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஊராட்சி செயலர் பொட்டு முருகேசன் கேட்டுக்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *