கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்கள் இரண்டு கால யாக சாலையில் வைத்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது

தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி மேள தாளங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வலம் வந்து புனித நீர் கலசம் வேத மந்திரங்கள் முழங்க ஆலயத்தின் உள்ள வன வீரபத்திர காளியம்மன் சிலை மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர் முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மீது புனித நீர் ஊற்றி கலாசபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்;

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *