கூவத்தூர் அரசு ஆரம்பப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா
கல்பாக்கம் ஜுலை 15
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியர் ஹெச் சார்லஸ் தலைமையில் கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் கல்வியாளர் சரவணன் மற்றும் பள்ளி கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராசரின் திருவரு வப் படத்துக்கு மாலையணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் ஆசிரியர்கள் உஷா சூரிய லீலா கீதா கஸ்தூரிபாய் வந்தனா ஜனனி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்