கும்பகோணம்: குடந்தை இரத்ததான டிரஸ்ட் சார்பில் உமாமகேஸ்வரபுரம் பாரதிதாசன் உதவிபெறும் பள்ளியில் கல்வி தந்தை கர்மவீரர் காமராசர்
124 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு டிரஸ்ட் அறங்காவலர் . டி .எல் சிவக்குமார் தலைமை தாங்கினார்.டிரஸ்ட் அறங்காவலர்கள் ராமதாஸ், பத்மநாபன், .அபூபக்கர்,சிவசங்கரன், முஹம்மது கோஸ்,
திருமதி அபிராமி, முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் ரெட்கிராஸ் சேர்மன்
.ரொசாரியோ , அகமது பாட்சா வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது: கர்மவீரர் காமராசர் அவர்கள் கல்வி மற்றும் மக்கள் சேவைக்காக ஆற்றிய பணிகள் குறித்து விளக்கினார்கள்..

மாணவ மாணவியரின் பேச்சு, ஓவியம், கட்டுரை கவிதை உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன.இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குறள் மற்றும் தமிழ் ஆங்கில அகராதி புத்தகங்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், சார்பினர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.முன்னதாகபள்ளி ஆசிரியர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *