செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 15

அமெரிக்கா டெக்ஸாஸில் வசிக்கும் இந்தியர்களான ரெஜினா மேரி லாவண்யா, அலெக்சாண்டர் டேவிட்,, ஆகியோரின் இரண்டு மகள்கள் சேன் அலெக்சாண்டர், சானியா அலெக்சாண்டர், இவர்கள் இருவரும் சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியில் அமைந்துள்ளஸ்ரீ சாய் நாட்டிய சேத்ரா நடனப் பள்ளியில் நடன ஆசிரியை, ஸ்ரீலதா கிரிதரன், ஆகியோர் மூலம் வீடியோ ஆன்லைன் வகுப்பில் நடனம் பயின்று , அமெரிக்காவிலிருந்து, சென்னை வந்து மியூசிக் அகாடமியில், பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பாக நடனம் ஆடினார்கள்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீதேவி நாட்டிய கலாலயத்தின் நிறுவனர் சதீஷ், பாதர். எட்வர்ட் ஆண்டனி ராஜ்,, அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த லீமா ரோஸ் ஆகியோர்கள் இரு நடன கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

மேலும் இரு நடன கலைஞர்கள் கூறுகையில், நமது தமிழர் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் தான் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது அதனை நாங்கள் முறையாக கற்றுக்கொண்டு நமது இந்திய நாட்டில் குறிப்பாக எங்களுடைய தாய் தந்தை பிறந்து வளர்ந்த தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களுடைய பெற்றோர்கள் ஆசை,
அதுவே எங்களுடைய லட்சியமாகவும் இருந்தது இதனை நாங்கள் முறையாக கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்ய உதவிய எங்களுடைய நடன ஆசிரியர் ஸ்ரீ லதா கிரிதரன் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி என்று தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *