நாகப்பட்டினம்,ஜூலை.15-
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 124 -வது பிறந்தநாளையொட்டி, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்துடன் காங்கிரஸ் கட்சி சார்பில் கைரேகை இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் வட்டார தலைவர்கள் ஜீவானந்தம், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி ஜீவா, மாநில ஒருங்கிணைப்பாளர் தெய்வானை, மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக பேச்சாளர் தங்க தமிழ்ச்செல்வன், கீழ்வேளூர் வட்டார தலைவர் லியோ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் திட்டச்சேரி நகர தலைவர் நிஜாமுதீன் உள்ளிட்ட அனைத்து கிராம கமிட்டி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சட்டமன்றத் தொகுதி தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.