தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் மருதுபுரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா நடந்தது.


விழாவிற்கு தவெக நிர்வாகி என்டிஎஸ் சார்லஸ் தலைமை வகித்து காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார்


அப்போது அவர் பேசியதாவது தமிழகதை தலைநிமிர செய்த பெருந்தலைவர் காமராஜர் கல்வியை மட்டும் அல்ல விவசாயம், தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பசியை போக்கவும் பாடுபட்டார் இதனால் தான் அறுபது ஆண்டுகள் தாண்டியும் தமிழ்நாட்டு மக்கள் அவரை போற்றி வருகின்றனர்.

அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜரை கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல அவரது கொள்கைகளை தமிழ்நாட்டில் நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு மீண்டும் தலைநிமிரும் என பேசினார். தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் சமபந்தி விருந்தை என்டிஎஸ் சார்லஸ் துவக்கி வைத்தார்


விழாவில் குத்தாலிங்கம், தங்கராசா, அருமைக்கனி, சாமுவேல், ராசா, தங்கசாமி, பொன்னுத்துரை, செல்லப்பா, தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *