நாகப்பட்டினம்,ஜூலை.15-
நாகை மாவட்டம் திருமருகல் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரிஷிகா முதலிடம், கோபிகா மூன்றாம் இடம் பெற்றனர்.

மேலும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிக்கு மாணவிகள் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார், உதவி தலைமை ஆசிரியர் சுகுமாரன் தலைமையில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பானந்தம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் தியாகராஜன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சௌரிராஜன், லெனின் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *