கரூர், ஜூலை 16: கரூர் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மின்னாம்பள்ளி வழியாக புதிய நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உத்தரவின்படியும், கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.பி. மதியழகன் பரிந்துரையின்படியும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய வழித்தடத்தில் தினமும் நான்கு முறை நகரப் பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, ஊர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *