மதுரை
தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மதுரை தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் மாணிக்கவாசகர் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாள் ஆகிய முப்பெரும் விழா பள்ளியில் நடைபெற்றது.
விழா பள்ளியின் பொறுப்புத்தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை தாங்கி பேசினார்.
முதுகலை தமிழாசிரியர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.தமிழாசிரியர் சரவணன் வரவேற்று பேசினார்.
தியாகராசர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் தெய்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.மாணவர்கள் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டு கல்வியறிவைப் பெற்று காமராசர் போல வாழ்வில் உயர வேண்டும் என்ற கருத்துக்களைப் பகிர்ந்தார்.தமிழாசிரியர் காளிதாஸ் நன்றி கூறினார்.தமிழாசிரியர்கள்கார்த்திகேஸ்வரி சாந்தி ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர் மாணவர்கள் தேவாரம்,திருவாசகம்,கவிதை ,பேச்சுப்போட்டிஎனத்தமதுதிறமைகளை வெளிப் படுத்தினர்.கல்வி வளர்ச்சி நாளையொட்டி
நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.