தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு இரண்டாம் நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் உத்தரவின்படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ் அறிவுறுத்தலின்படியும், அனுமந்தன்பட்டி, குச்சனூர் மற்றும் ஹைவேவிஸ் ஆகிய மூன்று பேரூராட்சிகளைச் சேர்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்காக இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் மற்றும் இணை இயக்குநர் வசந்தகுமார் ஆகியோர் பயிற்சியில் பங்கேற்று, கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு துல்லியமாகவும் முறையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.