வேப்பூர்
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்
நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அருகிலுள்ள பெரிய நெசலூர் ஊராட்சியில் பொதுமக்கள் குப்பை கொட்டிய இடத்தில் குப்பைகளை அகற்றிவிட்டு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் நட்டு வைத்தார்
அதனை தொடர்ந்து வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து ஆசிரியர்களுடன் இணைந்து கூடைப்பந்து விளையாடினார் அதனைத் தொடர்ந்து வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற சிறப்பு வகுப்புகளை நடத்தி அரசு பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு அறிவுருத்தினார்
பின்னர் வரம்பனூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு ஒன்பதாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து தே. புடையூரில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்
பின்னர் மேமாத்தூர் மணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்படும் உயர்மட்ட மேம்பால பணிகளை ஆய்வு செய்து பணியினை விரைவாகவும் தரமாகவும் கட்ட உத்திரவிட்டார்
இந்த ஆய்வின் போது வேப்பூர் வட்டாட்சிய ராமர், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சி, பெரியநாயகம் சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் மணி, உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார், உடற்கல்வி இயக்குனர் மனோரஞ்சித், உடற்கல்வி ஆசிரியர் ரவிக்குமார், ஊராட்சி செயலாளர்கள் சேப்பாக்கம் சரவணன், வேப்பூர் வெங்கடேசன், வரம்பனூர் ஜெயபிரகாஷ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்