மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி மாதத்தில் வி விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். அவர் கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபடுவர் .
ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று துவங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் ஆடி திருவிழாவிற்காக கொடி யேற்றப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பாலித்தார். கொடியேற்றம் முடிந்த பின்னர் அம்மனுக்கும், கொடிமரத் திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்த ருளி ஆடி வீதியை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் நேற்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
6-ம் நாளில் மீனாட்சி அம்மன் கிளி வாகனத்திலும், 7-ம் நாள் திருவிழாவான 22-ந்தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சன்ன தியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். 25-ந்தேதி கனக தண்டியல் அலங்காரத்தில் மீனாட்சி காட்சி அளிக்கிறார். விழா நாட்களில் கோவில் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கத்தேர் போன்றவை நடைபெறாது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், இணை ஆணையர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.