சென்னை, ஜூலை 18:

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமை அலுவலகத்தில் வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் நல்வாழ்த்துகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புஸ்சி ஆனந்தை, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்ற எழில் கேத்தரின், தனது கணவர் விஜய் ஆனந்துடன் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, புஸ்சி ஆனந்த் தனது அரசியல் ஆசானும், வழிகாட்டியும், பாதுகாவலருமாக இருப்பதாகக் குறிப்பிட்ட எழில் கேத்தரின், அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed