ஈரோடு ஜூலை 19
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் மற்றும் ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு விஜய பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை ஈரோடு பெரிய சேமூர் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஈரோடு சூலை இபிபி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சாமி தரிசனம் தொடர்ந்து பகுதி மக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பிறந்தநாள் விழாவினை பெரிய சேமூர் பகுதி கழகச் செயலாளர் ஆர் மணிகண்டன் ,பகுதி கழக துணை செயலாளர் எஸ் ஹரிகுமரன் பகுதி நிர்வாகி சத்தியமூர்த்தி 11-வது வார்டு செயலாளர் சக்திவேல் 12-வது வார்டு செயலாளர் நாகராஜ் 18 வது வார்டு செயலாளர் மணிகண்டன் உறுப்பினர் ரசூல் முகையதீன் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்து அன்னதானங்கள் வழங்கப்பட்டது.