ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.
இதனிடையே ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் சிவக்குமார் கவிதா குடும்பத்தினர் மற்றும் பிஎஸ்ஆர் சக்தி மேஸ்திரி ரூபிகா உள்ளிட்ட குடும்பத்தினரின் ஏற்பாட்டில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்கார பூஜை நடைபெற்றது…
ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் பக்தர்களுக்கு பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது.