தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுக்கான மாவட்ட செயலாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். செல்வகுமரன் கலந்து கொண்டு, ஒன்றியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளுடன் அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து, கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வரவிருக்கும் கட்சி நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் டி. காமராஜ், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், குண்டடம் ஒன்றியக் குழு முன்னாள் பெருந்தலைவர் கே.சி. குப்புசாமி, குண்டடம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார், ருத்ராவதி பேரூர் கழகச் செயலாளர் தமிழரசு, எஸ்.வி.டி. சிவபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஒன்றியம் மற்றும் பேரூராட்சியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் பங்கேற்று, கழக வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *