கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்பறனர் கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும், தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு மேம்பாட்டுப் பள்ளியில், “தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு சுழற்கோப்பை–2026” மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன…

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவில், கோவை மாவட்டத்தின் 80-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்..

முன்னதாக போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் கோமதி,தலைமையாசிரியர் சதாசிவன் ஆகியோர் துவக்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில்,கோ கோ விளையாட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் கருணாகரன்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கனகராஜ்,சசிகுமார்,தியாகி என்.ஜி.இராமசாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் ஜீவா,தினேஷ் குமார்,தமிழக வெற்றிக்கழக கிழக்கு மாவட்ட நிர்வாகி முன்னால் மாணவர் லோகநாதன் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

இந்த சுழற்கோப்பை போட்டிகளில் கபடி, வாலிபால், கோ-கோ, த்ரோ பால், கூடைப்பந்து மற்றும் பூப்பந்து ஆகிய ஆறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனியாக 18 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருவதால்,பிரம்மாண்ட மைதானத்தில்,விறுவிறுப்பான ஆட்டங்கள் நடைபெற்றன..

.விளையாட்டு உணர்வு, ஒழுக்கம், உடற்திறன் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடையே வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்த மாவட்ட அளவிலான விளையாட்டுத் திருவிழா, இளம் வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது திறமையை நிரூபிக்கும் சிறந்த களமாக அமைந்துள்ளதாக தியாகி என்.ஜி.இராமசாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *