மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
செம்பனார்கோவில் வட்டார இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைத்து தரக்கோரி கைகளில் பதாகை ஏந்தி வந்து இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் செம்பனார்கோவிலில் விளையாட்டு மைதானம் அமைத்து தந்து விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கோரிசெம்பனார்கோவில் வட்டார இளைஞர்கள் மனு அளித்துள்ளனர்.
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மொத்தம் 57 ஊராட்சிகள் உள்ளன. இதில் செம்பனார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆறுபாதி, காளகஸ்திநாதபுரம், மேலப்பாதி, கீழையூர், திருச்சம்பள்ளி, வல்லம், பரசலூர், மூக்கரும்பூர், மேலையூர் ஆகிய பகுதிகளில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, செம்பனார்கோவிலை மையப்படுத்தி உள்விளையாட்டு அரங்கம் (Indoor Stadium) ஒன்றை அமைத்துத் தந்தால் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும்,விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கவும்,தவறான பழக்கவழக்கங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் நல்ல சூழலை உருவாக்கவும்,இந்த உள்விளையாட்டு அரங்கம் மிகவும் அவசியமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.