வடலூர், ஜூலை.20
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கம் ஏ ஐ டி யு சி இணைப்பு மாவட்ட மாநாடு வடலூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேஷ் பிரபு தலைமை தாங்கினார்.செய்தி தொடர்பாளர் இளவரசன், ஒருங்கிணைப்பாளர் ஆனந்த ராமன், பக்கிரிசாமி, ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் புதிய மாவட்ட தலைவராக வேலுமணி தேர்வு செய்யப்பட்டார்.
மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் திருச்சி மணப்பாறையில் நடக்கும் மாநில மாநாட்டில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ்வரன் மூன்று அமைச்சர்கள் பங்கு பெறுகிறார்கள்
எனவே இந்த மாநாட்டில் பெருந்திரளாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், தூய்மை காவலர் துப்புரவு பணியாளர்,டி ஆர் எம் யு,ஓ எச் டி ஆப்பரேட்டர் பள்ளி தூய்மை காவலர் மற்றும் 14 வகையான தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பணி பாதுகாப்பு போன்றவை வழங்க வேண்டும்
என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன்,தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி, புஷ்பராஜ், காவேரி, விஜயா, ஆப்ரேட் சங்க மாநில பொதுச் செயலாளர் விஜயபாலன், இளையராஜா ரமேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.