லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க துவக்க ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் முகமது ஷஃபி பங்கேற்று பேசுகையில், புதிய சங்கத்தை உருவாக்க பொறுப்பேற்கும் சங்கம் முதலில் சங்கத்தின் சார்பாக புதிய சங்கம் துவக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாவட்ட ஆளுநரின் அனுமதிக்கு பிறகு பொறுப்பேற்கும் சங்கமானது விரிவாக்க குழுவை தேர்வு செய்ய வேண்டும் .அதன் நகலை மாவட்ட ஆளுநருக்கு மாவட்ட தலைவர், சங்க விரிவாக்கத்திற்கும் அனுப்ப வேண்டும்.

புதிய சங்க உறுப்பினர்கள் குறைந்தது 20 நபர்கள் சேர்த்தல் வேண்டும். இதற்கு உண்டான உதவிகளை பொறுப்பேற்கும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் செய்யும். புதிய லயன்ஸ் சங்க உறுப்பினர்களுக்கு அரிமா சங்கத்தின் அமைப்பு, கொள்கை, கோட்பாடுகள் பற்றிய செய்திகளை சொல்லும் கூட்டம் அமைக்க வேண்டும். சங்கத்தில் பொறுப்புகளை பெற இருக்கும் உறுப்பினர்களுக்கு அவர்தன் பொறுப்புகளைப் பற்றி கூற வேண்டும்.புதிய சங்கம் துவக்குவதற்கு சேவை திட்டங்கள், நிதி பெருக்க நிகழ்ச்சி பற்றிய விளக்கங்களை எடுத்துரைக்க வேண்டும்.

பொறுப்பேற்கும் சங்கம் புதிய பட்டய உறுப்பினர்களுக்கான சந்தா தொகை லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பெயருக்கு அனுப்ப வேண்டும். பொறுப்பேற்க இருக்கின்ற சங்க உறுப்பினர்கள் நிகழ்விற்கு மாவட்ட தலைவர்கள் அனைவரையும் அழைக்க வேண்டும்.துவக்க விழாவன்று தலைவரின் கையேடு,செயலரின் கையேடு, செயலரின் பதிவேடு, பொருளரின் பதிவேடு, சங்க உறுப்பினர் பெருக்க தலைவரின் கையேடு, பன்னாட்டு சங்க அமைப்பு மற்றும் சட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை அழைப்பு படிவங்கள், லயன்ஸ் செய்திகள் அடங்கிய புத்தகங்கள், அச்சடிப்புக்குரிய மாதிரிகள் வழங்கப்படும். பன்னாட்டு அரிமா சங்க பிரதிநிதிகளுக்கு புதிய சங்க உறுப்பினர்களின் பெயர், முழு முகவரி, தொழில், குருதி வகை பற்றிய முழு விபரங்கள், சங்க நிர்வாக‌ உறுப்பினர்களின் பெயர் புதிய சங்கத்தின் சாசனத் தலைவர் பெயர், புதிய சங்கம் இடம்பெறப் போகும் மண்டலம், வட்டாரம் பற்றிய செய்திகள், புதிய சங்க கூட்டம் நடைபெற இருக்கின்ற இடம், தேதி பற்றிய செய்திகள், வழிகாட்டி லயன் பெயர், விலாசம், விரிவாக்கத்திற்கான விருதுகளை பெற சிபாரிசு பெற்ற இரண்டு லயன்ஸ் உறுப்பினர்கள் பெயர் வழங்க வேண்டும்

என எடுத்துரைத்து வாழ்வின் மிகச்சிறந்த செயல் என்பது பிறர் முகத்தில் புன்னகையை தோற்றுவிப்பது தான் வாழ்வின் மிகச்சிறந்த மகிழ்ச்சி என்பது பிறருக்கு மகிழ்ச்சியான வாழ்வை அமைத்து தருவதுதான் பொதுநல நோக்கோடு உதவிடும் சேவைத்தளமாகவும் நல்ல நட்பினை அறிந்து கொள்ளவும், வாணிபம், இயக்கம் போன்றவை தழைத்திட இனிய நற்பண்புகளை வளர்க்கும் இடமாக அறியப்படுவது பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் என்றார். மாவட்ட தலைவர் பிரசன்ன வெங்கடேசன், வட்டாரத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன உறுப்பினர்கள் ச.ஹேமலதா, பெ.விஜயகுமார்,மு.முகமது ஹயாஸ் , முனைவர் ப.சங்கர்,து.கணேசன், ஹரி பிரசாத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *