ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் கிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முதல் நாள் அம்மன் தீர்தவாரிக்கு தீர்தமலைக்கு எழுந்தருளினார்.
இரண்டாவது நாள் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்சியும், மாவிளக்கு எடுக்கும் நிகழ்சியும் நடைபெற்றன. விழாவில் பக்தர்கள் 20 அடி அலகு குத்தி நேர்திக்கடன் செலுத்தினர்.விழாவின் சிறப்பு நிகழ்வாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனை தரிசித்தனர். இதில் ஊர் பொதுமக்கள் உட்பட 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.