கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்ட அதிமுக அறிமுக,ஆலோசனை கூட்டம்..


கரூர் மாநகர 6 பகுதிகளுக்கு உட்பட்ட 48-வட்டங்களுக்கும் பகுதி கழக செயலாளர்களின் நேரடி தேர்வுகளோடும், ஒப்புதலோடும்புதிய வட்ட கழக செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் நடைபெற்றது.


மாவட்ட கழக அவைத்தலைவர் திருவிகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட கழக செயலாளர் K.கமலக்கண்ணன் கலந்துகொண்டு வட்டக் கழக செயலாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு கழக வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.இக்கூட்டத்தில் மாநகர பகுதி கழக செயலாளர்கள் அன்னாமார் தங்கவேல், தாந்தோணி பெ.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ், V.R.செல்வக்குமார்,வழக்கறிஞர் மதன்,சரவணன், உள்ளிட்ட பகுதி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *