திருவாரூர்., ஜூலை.24

தமிழகம் முழுவதும் நேற்று தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இதனை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்த நிலையில் திரையரங்கம் முன்பு திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்த தமிழக வெற்றிக்கழக திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் மதன் என்பவரின் சகோதரர் மனோஜ் என்பவர் அவருடைய நண்பர் தமிழ் என்பவருடன் இணைந்து திடிரென தமிழக வெற்றிக்கழக மாணவரணி அமைப்பாளர் பசுபதி என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத தமிழக வெற்றிக்கழக மாணவரணி அமைப்பாளர் பசுபதி தாக்குதல் தாங்க முடியாமல் கீழே சரிந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்கு பணியில் இருந்த காவலர்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எக்ஸ்ரே மற்றும் இசிஜி உள்ளிட்ட சோதனைகள் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடர்பான வீடியோ காட்சிகள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் மதனின் சகோதரர் மனோஜ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் இந்த தாக்குதல் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து திருவாரூர் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தும், இதுவரை எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யாமல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆளுங்கட்சி மாவட்ட செயலாளரின் தம்பி மீது வழக்கு பதிவு செய்ய போலிசாருக்கு பயமா…? என திருவாரூர் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் கோஷ்டி மோதல் நடைபெற்ற சம்பவ இடத்தில் காவல்துறையினர் இருந்தும், மோதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் செல் போன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையிலும், பாதிக்கபட்டவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையிலும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது உள்நோக்கம் கொண்டுள்ளதாக சமுக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *