தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்

செங்கல்பட்டு மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ நாக தேவதை அம்மன் ஆலயம் காமராஜர் நெடுஞ்சாலை பழைய பெருங்களத்தூர் ஸ்ரீ நாகசக்தி நாக தேவதை அம்மனுக்கு 26 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெற்றது
காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம் காலை 9 மணிக்கு மகா அபிஷேகம் காலை 11:30 மணிக்கு மகா தீபாரதனை கூழ் வார்த்தல் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சியில் அன்னதான நிகழ்ச்சியும் உடனிருந்து வழி நடத்தினார்