கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகராட்சித் துறையின் மூலம் விவேகானந்தர் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதையும் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நுண் உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் நகராட்சி ஆணையாளர் து. உமா சங்கர் உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் சுகாதார அலுவலர் மணிகண்டன் மேலாளர் குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்