மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன்.


தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற பின்பு புதியதாக பொதுமக்கள் வசதிக்காக பல மார்க்கெட் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி புதியதாக மாநகராட்சி சார்பில் அம்பேத்கார் நகரில் ஸ்டெம் பார்க் அருகில் புதியதாக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மேயர் ஜெகன் மாநகராட்சி அதிகாரிகளிடம் என்னென்ன வசதிகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ளது

அதுபோல மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்க வேண்டும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அதுபோல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும் என்று உள்ளிட்ட விவரங்களை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் தெரிவித்தார்

அதுபோல ஒப்பந்ததாரரிடம் பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் அதுவும் தரமானதாக இருக்க வேண்டும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த மார்க்கெட் கொண்டு வர வேண்டும் என்று ஒப்பந்தக்காரரிடம் மேயர் ஜெகன் கூறினார்.

ஏற்கனவே மாநகராட்சி சார்பில் பல மார்க்கெட் செயல்பட்டு வந்தாலும் வடக்கு மண்டல பகுதியில் மார்க்கெட் கிடையாது பொதுமக்கள் வசதிக்காக அம்பேத்கர் நகரில் புதியதாக மாநகராட்சி சார்பில் மார்க்கெட் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்க்கெட்டில் மொத்தம் 48 கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதியில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிய வருகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *