துறையூர், ஜூலை 30:

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக தன்ராஜை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் யோகநாதன் தலைமையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி மருதமுத்து, மாவட்ட இணைச் செயலாளர் வேம்பு ரெங்கராஜ், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோம்பை லலிதா கண்ணன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் நாகராஜ், முன்னாள் செயலாளர் உத்தமசேகர், வேனுகோபால், ஜெயபிரகாஷ், ராஜேந்திரன், விஜயரங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் உள்ள கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்.

அப்போது, புதிய பொறுப்பை சிறப்பாக மேற்கொண்டு, கழகப் பணிகளை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்தி அறிவுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *